யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் (04.01.2024) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் அறிவிக்கப்பட்ட தீர்மானங்களும் வழிகாட்டல்களும் தொடர்பான முன்னேற்றம், மாவட்ட ஒருஙகிணைப்புக் குழு கூட்டத்தின் முன்னேற்றமும் முக்கிய தீர்மானங்களும் மற்றும் புதிய முன்மொழிவுகளும் தற்போதைய நிலைமையும் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதில் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வஜிர அபேவர்தனகௌரவ அங்கஜன் இராமநாதன், கௌரவ தருமலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்கள், மத்திய மற்றும் மாகாண திணைக்கள தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.









