யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்தொழில்  அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ  டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் (16) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

இதில், அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்  முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

அத்தோடு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளும்  ஆராயப்பட்டதோடு பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளும் ஆராயப்பட்டன.

இவ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நீர்வழங்கல்துறை அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்கள் கலந்துகொண்டதோடு, வடக்கு மாகாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பாக பல்வேறு  விடயங்களை குறிப்பிட்டார்.

மேலும், இந்திய  இழுவைப் படகுகளை கட்டுப்படுத்துதல், பேருந்து சேவை,  புகையிரத கடவைகளை முன்னுரிமை அடிப்படையில்  அமைத்தல், மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் கடற்தொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, நீர்வழங்கல்துறை அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு கிழக்கு  அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ  சிவஞானம் ஸ்ரீதரன்,பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன்,பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆப்பிரகாம் சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வராஜா கஜேந்திரன், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் பிரதம செயலாளர், கௌரவ ஆளுநரின் செயலாளர், பிரதி பொலிஸ்மா அதிபர்,  மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்  (காணி), மத்திய மற்றும்  மாகாண அமைச்சின்  திணைக்களத்தலைவர்கள், வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், முப்படையினர், விஷேட  அதிரடிப்படை வலய  அதிகாரி, யாழ் மாவட்ட கட்டளைத்தளபதியின் பிரதிநிதி, மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரசாா்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

DCC01  DCC02

  

DCC03  DCC04

  

DCC05  DCC06

  

DCC07  DCC08

  

DCC09  DCC10