யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்கான பிரிவுபசார விழா மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 07.03.2024 பிற்பகல் 02 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக 18.01.2023ம் திகதி முதல் தொடர்ச்சியாக மகத்தான சேவையை மக்களுக்கு நல்மனதுடன் ஆற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் சேவை நலன் பாராட்டு மற்றும் பிரிவுபசார விழா சிறப்பாக நடைபெற்றது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்கு மலர் மாலைகளும் பொன்னாடைகளும் அணிவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
அத்தோடு அரசாங்க அதிபரின் "வாழ்க்கை சுவடுகள் இறுவட்டு" வெளியீடு செய்யப்பட்டதோடு, யாழ் மாவட்ட செயலக மடல் முதற் பிரதியை மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.
மேலும், இந் நிகழ்வில் திருமதி சுதாஹரி சிவபாலசுந்தரன் மற்றும் புதல்விகள், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உட்பட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் , உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.





