உலக உணவுத் திட்டத்தின் "Food for Assets" செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் (15.05.2024) நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 07 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள (வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, காரைநகர், உடுவில், சண்டிலிப்பாய்,சங்கானை) பிரதேசங்களில் குளங்களை சிரமதானம் செய்யும் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கல் திட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன,உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ( Deputy Country Director) Mr.Gerald Rebelli, உலக உணவு திட்ட அரசாங்க பங்குடமை அதிகாரி திரு.முஸ்தபா நிஹ்மத், உலக உணவுத்திட்ட பொறியியலாளர் திரு.W.A.சந்திரதிலக, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரநாதன் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்





