யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை பிறப்பு பதிவுசெய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனைய நபர்களிற்கு பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் பிறப்பு பதிவு செய்யும் விசேட நடமாடும் சேவை நிகழ்வானது மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (26.06.2024) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறப்பு பதிவு செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையோரை அடையாளம் கண்டு பிறப்பு சான்றிதழ் பெற முடியாதுள்ளவர்களது பிரச்சினைகளுக்கு மாவட்ட பதிவாளர் நாயகத்துடன் நேரடியாக கலந்துரையாடி தீர்வு காணும் முகமாக இவ் பிறப்பு பதிவு செய்யும் விசேட நடமாடும் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாகவும் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற மாவட்ட பிரதிபதிவாளர்,பிரதேச செயலகங்களை சேர்ந்த பதிவாளர்கள், உதவிபதிவாளர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்திருந்தார்

இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி.உ.தர்சினி ,பிரதி பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா, மேலதிக மாவட்ட பதிவாளர்கள்,மாவட்ட செயலக பதிவாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இவ் நடமாடும் சேவை மூலமாக 83 பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

448947654 998467115011875 1502937545954488953 n 1 449027881 998467275011859 5772081816109123181 n 449130606 998467238345196 9072792825793535424 n  449160699 998466401678613 7862631642472129785 n 449163071 998466468345273 1636777739421922606 n 449163204 998466701678583 8240204481698458813 n 449163929 998466511678602 9094377513262907174 n