நெடுந்தீவு - நெடுவூர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (23.07.2024 ) பி. ப 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நெடுவூர்த் திருவிழாவானது எதிர்வரும் ஆவணி மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்தால் திருவிழா சிறப்புற நடைபெறுவதற்கான ஏற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் மேலதிகமாக ஒழுங்கு செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் தொடர்பாக துறைசார்ந்த திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் நெடுந்தீவு பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, கடற்படை அதிகாரி, பொலிஸ் அதிகாரி, தொடர்புடைய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
2 1 3 4 5