தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நடாத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (06.08.2024) காலை 9.00 மணிக்கு ராஜா கீறீம்கவுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட தொகைமதிப்பு ஆணையாளரும் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபருமாகிய திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இதுவரை நடைபெற்ற தொகைமதிப்பு செயற்பாடுகளில் ஈடுப்பட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்களுக்கு தனது பாரட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்ததோடு அவர்களுக்குரிய மெச்சுரைகளையும் வழங்கிவைத்தார்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







