வளிச்சீராக்கி பொறிவலர்களுக்கான தேசிய தொழில் தகைமை மட்டம் (NVQ) சான்றிதழ் வழங்கும் இலவச திட்டத்தினை செயல்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் (10.08.2024) காலை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய தொழில் தகைமை மட்டச் சான்றிதழ் (NVQ-3) இல்லாத 18 மாதங்களுக்கு அதிகமான தொழில் அனுபவம் கொண்ட 33 வளிச்சீராக்கி பொறிவலர்களுக்கான (AC Technician) முன் அனுபவக் கற்கை முறையூடாக தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் பதிவு மற்றும் விழிப்புணர்வுச் செயற்றிட்டம் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் வளிச்சீராக்கி பொறிவலர்கள் கலந்து கொண்டார்கள்.
 
1 2 3 4