மாவட்ட சுற்றாடல் குழு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (28.08.2024) மதியம் 12 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் நகர்புறங்களில் காணப்படும் கழிவகற்றல் பிரச்சினைகள், திண்ம கழிவு முகாமைத்துவம், வைத்திய கழிவு முகாமைத்துவம் மற்றும் மரநடுகை திட்டத்தில் ஏற்படும் சவால்கள் குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) , திட்டமிடல் பணிப்பாளர் ,உதவி மாவட்ட செயலாளர் , பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் , வன பரிபாலன திணைக்கள உதவிப்பணிப்பாளர், மாநகர சபை ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உதவி ஆணையாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள பொறியியலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5