சனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று கண்காணிப்பு நடவடிக்கைக்கு செல்லும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (02.09.2024) காலை 9.00 மணிக்கும் 10.30 மணிக்கும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள்
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 04 ஆம் திகதி பொலிஸ், மாவட்டச் செயலகம் மற்றும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்களுக்கும், 05 ஆம் திகதி பிற அரச நிறுவனங்களில் கடமை யாற்றுபவர்களுக்கும் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் 06 ஆம் திகதி பிற அரச நிறுவனங்களில் கடமை யாற்றுபவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மற்றும் பொலிசாருக்கும் அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாகவும், இவ் அஞ்சல் வாக்களிப்பானது ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்கள் போலவே செயற்பட்டு, இட ஒழுங்கமைப்பு, முகவர்களுக்குரிய ஏற்பாடுகள் போன்றவற்றை முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா போன்ற விடயங்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அலுவலகர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டு தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்போது சனாதிபதி தேர்தலில் அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று கண்காணிப்பு நடவடிக்கைக்கு செல்லும் அலுவலகர்களுக்கான
கடமைகள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயமலர்வில் அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று கண்காணிப்பு நடவடிக்கைக்கு செல்லும் அலுவலர்களாக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5