சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது புதிய விமான சேவை இண்டிகா (Indiga) விமான சேவை நேற்றைய தினம் (01.09 2024 ) தனது சேவையினை ஆரம்பித்தது.
சென்னையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த விமான சேவை சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுடன் பி.ப 3.05 மணியளவில் பலாலியை வந்தடைந்தது. முதல் தடவையாக வருகை தரும் பயணிகளுக்கு தொழில்துறை நிறுவனத்தின் பங்களிப்புடன் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் மற்றும் சுற்றுலா ஊக்கப்படுத்தல் கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இச்சேவை மூலம் கலந்து கொண்டு முதலில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு நினைவுப் பொதிகள் வழங்கி வரவேற்றாா்.
இந்நிகழ்வில் யாழ் .இந்திய துணைத்தூதுவர், Airport & Aviation servies pvt( Ltd) நிறுவன உதவி முகாமையாளர் மாவட்ட விமானப் படை அதிகாரிகள், தொழிற்துறைத் திணைக்கள அதிகாரிகள், வடமகாண கலாசாரத் திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஹோட்டல் முகாமையாளர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோா் பங்கு பற்றியிருந்தனர்
 
2 3 1 4 5