மாவட்டச் செயலகத்தில் சிரேஷ்ட சாரதியாக அர்ப்பணிப்பான சேவையாற்றி 23 வருட அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் திரு. நாகப்பர் குகதாசன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள் தமது வாழ்த்துரையில், சாரதி கடமை என்பது மிகவும் கடினமான பணி. அப் பணியினை மிகவும் நேசித்து சிறப்பாகவும், துல்லியமாகவும் கடமையாற்றியவர் என்பதுடன் பண்புமிக்கவராக விளங்கியவர். தான் கடமையாற்றிய உயர் அதிகாரிகளுக்கு நம்பகத்தன்மை வாய்தவராக விளங்கியதுடன், சாரதிகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் வாழ்த்துரைகளை வழங்கினார்கள்.
அரசாங்க அதிபர் அவர்களால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பாமாலை வழங்கி திரு. திருமதி குகதாசன் தம்பதிகள் கெளரவிக்கப்பட்டார்கள். திரு. நா. குகதாசன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.






