சமுதாய மட்டப் புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியாக முதலாம் இடம் பெற்றவர்களுக்கான தேசியமட்ட சுபாபிமானிப் போட்டிக்கு - யாழ்ப்பாண போட்டியாளர்களைத் தெரிவு செய்வதற்கான தெரிவானது இன்றைய தினம் (01.10.2024) நிகழ்நிலை (Zoom) ஊடாக, காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் கண்காணிப்பில் நடைபெற்றது.
சுவாபிமானி 2023 மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற சிறந்த பிரதேச சுப சக்திஅமைப்பு, சிறந்த சுப சக்தி அங்கத்தவர், சிறந்த CBR பிரதேச வழி நடாத்தல் குழு ,CBR நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் வீட்டு மட்டத்தில் வெற்றிகரமாக சமூகமயப்படுத்தப்பட்ட மாற்றுத் திறனாளி, சிறந்த காட்சிப்படுத்தும் மட்டத்திலான படைப்பினை மேற்கொண்ட மாற்றுத்திறனாளி, சிறந்த பிரதேச உத்தியோகத்தர் ஆகிய போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.







