வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான உளவள பயிற்சி நெறி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.10.2024) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பியவர்கள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் உத்தியோகத்தர்களின் குடும்ப அங்கத்தவர்களின் உளவளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உளவளம் சாா்ந்த செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி நெறி நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.S .ஜீவசுதன் அவர்கள் இப் பயிற்சி நெறியின் வளவாளராக கலந்துகொண்டார்.






