புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய தைப்பொங்கல் பண்டிகையானது புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கெளரவ கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (18.01.2025) காலை 07.30 மணிக்கு தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் சமய வழிபாடுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வரை ஆன்மீக மற்றும் கலாசார விழிப்புணர்வு நடைபயணம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கல்லூரி மண்டபத்தில் பண்பாட்டு கலாசார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் மதத்தலைவர்கள், இந்திய தூதுவர் கெளரவ ஸ்ரீ சந்தோஷ் ஜா, கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சறோஜா சாவித்திரி போல் ராஜ், வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் கௌரவ திரு.பிரதீப் சுந்தரலிங்கம், புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கெளரவ கமஹேதர திசாநாயக்க, தொழில் பிரதி அமைச்சர் கௌரவ மஹிந்த ஜெயசிங்க, இந்திய துணைத் தூதுவர் கெளரவ ஸ்ரீ சாய் முரளி, பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கலாநிதி நஜித் இந்திக்க, கெளரவ கருணநாதன் இளங்குமரன், கெளரவ வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், வட மாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னாா் ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த மூத்த கலைஞர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் என பலபேர் கலந்து சிறப்பித்தனர்.






