சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு .எஸ்.சுரேந்திரநாதன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (11.03.2025) காலை 9.30 மணி தொடக்கம் 1.00மணி வரை யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் GIZ நிதி அனுசரனையுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து இச் செயலமர்வை மேற்கொண்டது.
பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்வாங்கல் தொடர்பான விடயங்கள் ஊடாக தொழில்முயற்சியில் எவ்வாறு வெற்றியடையலாம் என்பது தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது
இப் பயிற்சி நெறியில் மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர், சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவின் உதவிப்பணிப்பாளர், சமூகமட்ட அமைப்புக்கள், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் (NEDA) மாவட்ட இணைப்பாளர் ,துறைசாா் உத்தியோத்தர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 1 2 3 4 5