மாற்றுத் திறன் நபர்களுக்கான மாவட்ட மட்ட வழி நடத்தல் குழுக்கூட்டம் (Jaffna District Steering Committee Meeting) யாழ்ப்பாணமாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (21.03.2025) காலை 10.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், மாற்று திறனாளிகள் இயலாதவர்கள் என்ற சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும் எனவும், மக்களின் மனங்களில் இது தொடர்பில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், அவர்களுக்கான வசதி வாய்ப்புக்கள் வழங்குவதில் வினைத்திறனாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். அடுத்த மாவட்ட வழி நடத்தல் குழுக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் அதிகளவு பிதிபலிக்கும் வகையில் அவர்களின் வகைரீதியாக உள்ளவர்களை அதிகளவு உள்ளடக்கி அவர்களின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சனைகளை இனங்காண வாய்ப்பாக அமையும் எனவும் குறிப்பிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகளின் சமூகப் பொருளாதார, கலாசார மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்கும் வசதியளிப்பதற்கும் மாவட்டச் செயலகத்துடன் இணைந்த வகையில் மாகாண சமூக சேவைகள் திணைக்களம் இணைந்து செயற்பட்டுவருவதற்கும் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாகாண சமூக சேவைகள் உதவிப்பணிப்பாளர் திருமதி தனுஜா லுக்சாந்தன், FAIRMED நிறுவன இலங்கைக்கான இணைப்பாளர் வைத்திய கலாநிதி நயனி சூரயாராச்சி மற்றும் மாவட்ட பிரதிநிதி. சமூகசேவை திணைக்கள மாவட்ட இணைப்பாளர் திரு. தி. உமாசங்கர்,
மாகாண சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் , தலைமை பீட உத்தியோகத்தர், கல்வி , சுகாதாரம், உள்ளுராட்சி துறை சார் மாவட்டப்பிரதிநிதிகள் , சிறுவர் நன்னடத்தை , கிராம அபிவிருத்தி துறை சார் மாவட்ட உத்தியோகத்தர்கள் , மாவட்ட மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்






