யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17.04.2025) மாலை 3.00 மணிக்கு நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டு குழுக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அவை தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட்டன.
மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட காணிப்பயன்பாட்டு உதவிப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன பொறியியலாளர், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6