மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொது ஆலோசனை கேட்கும் கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.05.2025)காலை 09.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவதுகாலாண்டுக்கான கூட்டம் இதுவெனவும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினானது மாவட்டச் செயலகத்துடன் நெருக்கமாக செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டு, ஆணைக்குழுவிற்கு நன்றியினைத் தெரிவித்ததுடன், மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 18.3% மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான பங்குதார்கள் கூட்டத்தில் பங்குபற்றியுள்ள சமூக ஆர்வலர்கள் தேவையான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், மின்சார கட்டண முறைமை அதாவது விலைச் சூத்திரத்திற்கு அமைய, பொது ஆலோசனைக் கேட்டலை ஆணைக்குழு நடத்துவதால் இக் கூட்டத்தில் ஜனநாயக முறையில் மக்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதனூடாக தீர்வுகளை முன்வைப்பது ஆரோக்கியமானது எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் முன்னறிவிக்கப்பட்ட உற்பத்தி கலவை மற்றும் செலவுகள், எரிபொருள் செலவுகள், பரிமாற்றம் மற்றும் விநியோகச் செலவுகள், நிதிச் செலவுகள், 2024 ஆம் ஆண்டு ஜீன் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையிலான வருமான உபரி, 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டின் நிதி இழப்பு, முன்மொழியப்பட்ட கட்டண அமைப்பு முறை, கட்டண சமர்ப்பிப்பு குறித்த ஆணைக்குழிவின்ஆராய்வு மற்றும் முன்னேற்றத்திற்கான பங்குதாரர் திட்டங்கள் தொடர்பாக 09 தலைப்புக்களின் கீழ் சமர்ப்பிப்புக்கள் முன்வைக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் வேலணை மற்றும் மருதங்கேணி பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், வர்த்தக பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்
உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர் (நிர்வாகம்), கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






