நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் துறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்றைய தினம் ( 01.08.2025)
காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணமாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் துறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கான இவ் விழிப்புணர்வு செயலமர்விற்காக கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் திரு.சமன் சிறிலால் மற்றும் அவரது குழுவினருக்கு தமது வரவேற்பையும் நன்றிகளையும் தெரிவித்தார். மேலும் இவ் கைத்தொழில்சார் நடவடிக்கைகளில் ஏறத்தாழ 6000 தொழில் முயற்சியாளர்கள்
வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 600 தொழில் முயற்சியாளர்களே வினைத்திறனாக செயற்பட்டு வருவதாகவும் இவர்களில் பலர் நுண் மற்றும் சிறிய தொழில் முயற்சிகளிலிருந்து நடுத்தர
தொழில் முயற்சிக்கு நோக்கி செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டு அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.மேலும், இத்தகைய செயலமர்வுகள் தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி என்பது பாரிய பிரச்சினையாக உள்ள இக் காலகட்டத்தில் அரச நிர்வாக கட்டமைப்பால் பல வழிகளில் உதவிகள் வழங்கப்படுகின்ற போதிலும் சில முயற்சியாளர்கள் அரசினால் இலவசமாக வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுவதனால் அந்த உதவிகளை சரியான முறையில் பயன்படுத்துவது குறைவாக காணப்படுவதாவும் தெரிவித்ததுடன், இதே சொந்த முதலீட்டில் ஒரு வியாபாரத்தை மேற்கொள்ளும் போது முனைப்புடன் முயற்சியுடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் எமது பல்வேறு முயற்சியாளர்களை நோக்கி ஏற்றுமதியாளர்கள் யாழ் நோக்கி வருவதாகவும் அதற்கு அவர்களின் தரமான பொருள் காரணம் எனவும் குறிப்பிட்டதுடன், இருப்பினும் முயற்சியாளர்களுக்கு அதன் அளவு, இலாபம் மற்றும் சந்தைப் பெறுமதி என்பவற்றில் இலாபம் குறைவாக காணப்படுவதாகவும் அதற்கு அரச நிர்வாக கட்டமைப்பின் இவ்வாறான விழிப்புணர்வு பயிற்சிகள் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்த துணை புரியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் விருத்தி விழிப்புணர்வு செயலமர்வானது 50 தொழில் முயற்சியாளர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் திரு.சமன் சிறிலால், பிரதம நிர்வாக அதிகாாி திரு.யூட் பெர்னான்டோ மற்றும் உதவிப்பணிப்பாளர் திரு.சசிகதிமெல், மாவட்ட உதவி, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், வங்கிகளின் பிரதிநிதிகள், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர், துறைசாார் உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 8 9 10 11