கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர்கள் நியமனம்
கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட திரு. ஈ. தயாரூபன் அவர்களும், சாவகச்சேரி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திரு F. C. சத்தியசோதி அவர்களும் இன்றைய தினம் (01.09.2025) காலை 08.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.
மேலும் இன்றைய தினமே புதிதாக நியமிக்கப்பட்ட கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர்கள் தமது கடமையினை பொறுப்பேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.