வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி மேற்கு (கரவெட்டி) பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து கொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (12.09.2025) வெள்ளிக்கிழமை பி. ப. 2.30 மணிக்கு நெல்லியடி மத்திய கல்லூாி கலையரங்கத்தில் நடைபெற்றது.பிரதேச செயலாளர் திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டு அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி லாகினி நிரூபராஷ் அவர்களும், கெளரவ விருந்தினர்களாக மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. சுகுணலினி விஜயரத்தினம் அவர்களும் கலாபூசணம் திரு. கந்தன் பாலன் (மூத்தகலைஞர்) மற்றும் கலாபூசணம் செல்வி. சிவகுரு பேரின்பநாயகி (மூத்தகலைஞர் ) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
பல்துறை வல்லோன் கலாநிதி தம்பிஐயா கலாமணி அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆலய முன்றலிருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து (அமிர்தவாகினி இசை மன்ற மாணவர்கள்) , வரவேற்பு நடனம்(குருஷேத்திர நடனாலய மாணவர்கள்), சிவன் கீர்த்தனை (குருஷேத்திர நடனாலய மாணவர்கள்), இசைச்சங்கமம்(விக்னா இசை மன்ற மாணவர்கள்) , ஒயிலாட்டம்(சதா பொன்ஸ் அஷ்விகா நடனாலய மாணவர்கள்) ,கிராமியப்பாடல் (அமிர்தவாகினி இசை மன்ற மாணவர்கள்) கௌத்துவம் (கலாசார மத்திய நிலைய மாணவர்கள்),கும்மி(குருஷேத்திர நடனாலய மாணவர்கள்) , சிந்து நாடகக்கூத்து (கம்பர் மலை கலாபூசணம் கந்தையா விஜயரத்தினம்) என்பன சிறப்பாக நடைபெற்றது.
கலைஞர்களுக்கான " கலைச்ஞான வாருதி"விருது, "கலைவாருதி" விருது "இளங்கலைஞர் விருது " அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.






