குறிகட்டுவான் இறங்குதுறைக்கு முன்னரான நடைபாதையுடன் கூடிய வீதிப் புனரமைப்பு 299.80 மில்லியன் ரூபாவில் - பெருந் திட்டத்திற்கு அமைய (Master Plan) அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பணநிகழ்வு இன்றைய தினம் (04.10.2025) காலை 09.00 மணிக்கு குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் மற்றும் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதல்களுடன் சிறப்பாக நடைபெற்றது.இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கெளரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் திரு. T. பாஸ்கரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் திரு குரூஸ், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.






