20அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிபட்டறை நிகழ்வானது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் திரு. ரி. என். சூரியராஜா அவர்களின் தலைமையிலும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடனும் இன்றைய தினம் (14.10.2025) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் எதிர்பாராத வகையில் அனர்த்தம் ஒன்று நிகழும்போது எடுக்கப்படும் முடிவானது விரைவாகவும் வினைத்திறனாகவும் எடுக்கும்போது அச் செயற்பாடு பூரண வெற்றியளிக்கும் வகையில் அமையுமெனவும் இவ்பயிற்சி பட்டறை அனுபவங்கள் மற்றும் நாளாந்த கடமைகளுடன் இணைந்ததாகவும் குறிப்பாக முடிவெடுக்கும் திறன் குறித்த பிரதேசத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிகளான பிரதேச செயலாளர்களுக்கு உள்ளதென தெரிவித்தார்.மேலும் கடந்த கால அனுபவங்கள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து சில விடயங்களை உருவாக்கி கொள்ள வேண்டுமெனவும்
எடுக்கப்படும் முடிவுகள் விரைவானதாகவும் சரியானதாகவும் அமைவதுடன் அதற்கு அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் செயற்படல் அவசியமென தெரிவித்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம்திகதி நடைபெறவுள்ள அனர்த்த முகாமைத்துவ ஒத்திகை நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கி எமது மாவட்டத்தில் எதிர்பாராமல் நிகழும் அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாக்க ஒவ்வொருவரும் தத்தமது கடமைக்கூறுகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில்
அனர்த்தம் ஒன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ளல், எடுக்கப்படும் முடிவுகள் எவ்வாறு அமைய வேண்டுமென்பது தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி),மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள்,பிராந்திய சுகாதார திணைக்கள அதிகாரிகள் ,முப்டைகளின் அதிகாரிகள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ,ஆசிரியர்கள் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
 
 
1 2 3 4 5 6 7 8 9 11 12 18 20