11யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் மூன்றாம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (23.10.2025) பி.ப 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்கஅதிபர் அவர்கள,
சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை பிரதேச செயலக மட்டத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் ஆராயப்பட்டு தீர்க்கப்படுவதுடன், தீர்க்க முடியாத பிரச்சனைகளை மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்து தீர்ப்பதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனத் குறிப்பிட்டார். மேலும் மாணவர் இடைவிலகல் மாணவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று அதில் 60 சிறுவர்கள் மீள் இணைக்கப்பட்டுள்ளதாகவும்,
பாடசாலை மாணவர்களின் பிரச்சினை தொடர்பாக வலய ரீதியில் தொடர்புடைய உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலினை பிரதேச செயலாளர்களின் தலைமையில் முன்னெடுக்குமாறு அரசாங்க அதிபரினால் கோரப்ப்பட்டது. அத்தோடு
பிள்ளைகளின் பதிவு செய்யப்படாத பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடமாடும் சேவையினை எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபரினால் வலியுறுத்தப்பட்டது.
மேலும் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாகவும் அவற்றிற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்தொடர்பாகவும், கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், மாகாண சிறுவர் நன்னடத்தை உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11