யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தித்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13.11.2025) மு.ப 11.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் , கிராமிய அபிவிருத்தித்திட்டம் , கிராமிய வீதி அபிவிருத்தித்திட்டம், வீடமைப்பு, தேசிய ஒருமைப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம், நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு பிரதேச செயலகங்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், மீள் குடியேற்ற வேலைத்திட்டம், விவசாயம் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் அரசாங்க அதிபரினீல் விரிவாக ஆராயப்பட்டதுடன் நிறைவேற்றப்பட்ட நிறை வேற்றப்படாத திட்டங்கள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டு, உரிய அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரமத உள்ளக கணக்காய்வாளர், பிரதம பெறியியலாளர் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உதவி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக துறைசாா் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9