மீள்
குடியேற்றம் மற்றும் மீள்இணைவிற்கான நிலைத்து நிற்கக்கூடிய நீடித்த உதவித்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்தகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட திறன் அபிவிருத்தி இணைப்பாளர் திரு. ரி. நீலாம்பரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (12.12.2025) மு. ப. 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், தொழில் தகைமைச் சான்றிதழ் மிக முக்கியமானது எனவும், தாம் கற்ற கல்வியுடன் ஒரு மாணவன் தேசிய தொழில் தகைமைச் சான்றிதழை கட்டம் கட்டமாக இறுதிவரை பூர்த்தி செய்தால் அச் சான்றிதழ் பட்டதாரிச் சான்றிதழுக்கு சமனாக அமையும் எனத் தெரிவித்தார். மேலும், இக் கற்கை நெறிமூலம் கற்றதைக் கொண்டு மேலும் ஆற்றலுடன், முன்னோக்கி முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும், போட்டி உலகில் போட்டித் தன்மையுடன் எதிர்காலத்தில் சிறக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கடந்த முறை கடற்றொழி்ல் படகு பயிற்சி 42 பேருக்கு வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர் அவர்கள், திறமைகளை மேன்மேலும் வளர்த்து ஒளிமயமான வாழ்க்கை வாழ வாழ்த்துவதாக தெரிவித்தார். IOM நிறுவனத்தின் அனுசரனையில் தொழில் பயிற்சி அதிகார சபையினால், கணினி வன்பொருள் 01 பேரும், மர கைவினைப்பொருட்கள் 02 பேரும், இலத்திரனியல் 04 பேரும், தையல் 10 பேருமாக பயிற்சிகளை நிறைவு செய்த 17 பயிற்சியாளர்களுக்கு தொழிற் தகைமைச் சான்றிதழ் (NVQ level 111 & IV) அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, தொழில் பயிற்சி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு. கே. நிறஞ்சன், IOM நிறுவன திட்ட இணைப்பாளர் திரு. எஸ். சுசிதரன் மற்றும் பிரதேச திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.
குடியேற்றம் மற்றும் மீள்இணைவிற்கான நிலைத்து நிற்கக்கூடிய நீடித்த உதவித்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்தகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட திறன் அபிவிருத்தி இணைப்பாளர் திரு. ரி. நீலாம்பரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (12.12.2025) மு. ப. 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், தொழில் தகைமைச் சான்றிதழ் மிக முக்கியமானது எனவும், தாம் கற்ற கல்வியுடன் ஒரு மாணவன் தேசிய தொழில் தகைமைச் சான்றிதழை கட்டம் கட்டமாக இறுதிவரை பூர்த்தி செய்தால் அச் சான்றிதழ் பட்டதாரிச் சான்றிதழுக்கு சமனாக அமையும் எனத் தெரிவித்தார். மேலும், இக் கற்கை நெறிமூலம் கற்றதைக் கொண்டு மேலும் ஆற்றலுடன், முன்னோக்கி முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும், போட்டி உலகில் போட்டித் தன்மையுடன் எதிர்காலத்தில் சிறக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கடந்த முறை கடற்றொழி்ல் படகு பயிற்சி 42 பேருக்கு வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர் அவர்கள், திறமைகளை மேன்மேலும் வளர்த்து ஒளிமயமான வாழ்க்கை வாழ வாழ்த்துவதாக தெரிவித்தார். IOM நிறுவனத்தின் அனுசரனையில் தொழில் பயிற்சி அதிகார சபையினால், கணினி வன்பொருள் 01 பேரும், மர கைவினைப்பொருட்கள் 02 பேரும், இலத்திரனியல் 04 பேரும், தையல் 10 பேருமாக பயிற்சிகளை நிறைவு செய்த 17 பயிற்சியாளர்களுக்கு தொழிற் தகைமைச் சான்றிதழ் (NVQ level 111 & IV) அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, தொழில் பயிற்சி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு. கே. நிறஞ்சன், IOM நிறுவன திட்ட இணைப்பாளர் திரு. எஸ். சுசிதரன் மற்றும் பிரதேச திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், தொழில் தகைமைச் சான்றிதழ் மிக முக்கியமானது எனவும், தாம் கற்ற கல்வியுடன் ஒரு மாணவன் தேசிய தொழில் தகைமைச் சான்றிதழை கட்டம் கட்டமாக இறுதிவரை பூர்த்தி செய்தால் அச் சான்றிதழ் பட்டதாரிச் சான்றிதழுக்கு சமனாக அமையும் எனத் தெரிவித்தார். மேலும், இக் கற்கை நெறிமூலம் கற்றதைக் கொண்டு மேலும் ஆற்றலுடன், முன்னோக்கி முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும், போட்டி உலகில் போட்டித் தன்மையுடன் எதிர்காலத்தில் சிறக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கடந்த முறை கடற்றொழி்ல் படகு பயிற்சி 42 பேருக்கு வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர் அவர்கள், திறமைகளை மேன்மேலும் வளர்த்து ஒளிமயமான வாழ்க்கை வாழ வாழ்த்துவதாக தெரிவித்தார். IOM நிறுவனத்தின் அனுசரனையில் தொழில் பயிற்சி அதிகார சபையினால், கணினி வன்பொருள் 01 பேரும், மர கைவினைப்பொருட்கள் 02 பேரும், இலத்திரனியல் 04 பேரும், தையல் 10 பேருமாக பயிற்சிகளை நிறைவு செய்த 17 பயிற்சியாளர்களுக்கு தொழிற் தகைமைச் சான்றிதழ் (NVQ level 111 & IV) அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, தொழில் பயிற்சி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு. கே. நிறஞ்சன், IOM நிறுவன திட்ட இணைப்பாளர் திரு. எஸ். சுசிதரன் மற்றும் பிரதேச திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.






