முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த முன்னேற்ற கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (19.02.2026) மு. ப. 11.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதியோர் சேவைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை யாழ் மாவட்டத்தில் பதிவு செய்யாது இயங்கி வரும் முதியோர் இல்லங்கள் அனைத்தும் பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அரசாங்க அதிபரினால் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், முதியோர் சேவைகள் தொடர்பிலான உரிய உத்தியோகத்தர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியப்பட்டு அதற்கான தீர்வுகளும் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, முதியோர் மேம்பாட்டு மாவட்ட இணைப்பாளர் திருமதி ஸ்பெல்மன் பாலகுமாரி, பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6