யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (19.02.2026) பி. ப 03.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் 2026 ஆம் ஆண்டு நடைமுறைப்படவுள்ள பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், பிரஜாசக்தி உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சிவகுமாரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் திட்டமிடல் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6