சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமானது அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் சமுர்த்திப் பயனாளிகளை பொருளாதார ரீதியாக வலுவூட்டும் நோக்கில் தொழிற் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இவ் வேலைத்திட்டத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (26.02.2026) மேலதில அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பொ.ஸ்ரீவர்ணன், மூன்றாம் நிலை மற்றும் தொழில் கற்கைகள் ஆணைக்குழுவின் (TVEC) உதவிப் பணிப்பாளர் திரு. W.B விஜயசிங்ஹ ஆகியோரின் பங்குபற்றினார்கள். வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் அஸ்வெஸ் மபயனாளிகளை பலப்படுத்தி அவர்களது தொழிற்திறனை மேம்படுத்தி, சுயதொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இத் திட்டத்தின் குறிக்கோளாகும். இதன் போது குறித்த திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் நடைமுறைகள், வேலை வாய்ப்புக்கள், மூன்றாம் நிலை மற்றும் தொழில் கற்கைகள் ஆணைக்குழுவில் (TVEC) நிறுவனங்களை பதிவு செய்வதில் உள்ள பிரச்சினைகள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில் வாய்ப்புக்களை வழங்குகின்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
1 2 3 4 5