பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு, பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் இன்று (22.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னர், கௌரவ பிரதமர் அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு வருகை தந்து விருந்தினர் பதிவேட்டில் கையொப்பமிட்டார். இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் கௌரவ பிரதமர் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.






