
யாழ். மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் 02.07.2021 அன்று மாலை 4 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத் தொழில்துறையை ஆரம்பிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கான பொறிமுறை , நெடுந்தீவு மண்கும்பான் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அபிவிருத்திகளை ஏற்படுத்துவதற்கான நிதிஒதுக்கீட்டு வரைபுகளை தயார் செய்வது , மற்றும் காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முதலீடு செய்வதற்கு எமது முதலீட்டாளர்கள் தயாராக உள்ளநிலையில், அதற்குரிய நிறுவன மயப்படுத்தப்பட்ட பொறிமுறை தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன், சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ,மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், சுற்றுலாத் துறைசார் திணைக்களத் தலைவர்கள்,மாவட்ட செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






