
இலங்கையின் தேசியவிளையாட்டு தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம்(30.07.2021) காலை 8.30 மணிக்கு யாழ்மாவட்ட செயலக முன்றலில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் Covid-19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தேசியவிளையாட்டு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.குறித்த நிகழ்வில் தேசியக் கொடியினை மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் ஏற்றி வைத்ததை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.
தொடர்ந்து, நிறுவனத்தின் உத்தியோகத்தர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையின் ஊடாக பயனுறுதிவாய்ந்த சேவையை வழங்குவதற்காக உடற்பயிற்சி, உள்நாட்டு உணவுகளினதும் போஷாக்கினதும் முக்கியத்துவம் , மனஅழுத்தத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் , மற்றும் தியானத்தின் முக்கியத்துவம் ஆகிய விடயங்கள் தொடர்பாக சிறப்புரையை யாழ்.பல் கலைக்கழக உடற்கல்வி விஞ்ஞான அலகு சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ச.சபானந்த் அவர்கள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் இறுதியாக மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உடற்பயிற்சிகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .






