28eldersec1முதியோர் தேசிய செயலகத்தால் 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் 28.10.2021 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் முதியோர் தேசிய செயலகத்தின் பணிப்பாளர் கே.ஜி.லெனரோல், உதவி மாவட்டச் செயலாளர்திருமதி .ச.கி.நி.கமலராஜன், முதியோர் தேசிய செயலகத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் முதியோரை பாதுகாப்பது எம் ஒவ்வொருவரினதும் கடமையாவதுடன் அவர்களுக்கு சேவை செய்வது எமக்கு கிடைத்த பாக்கியமாக கருதவேண்டுமென தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் முதியோர் செயலகத்தால் பகல் நேர நிலையங்களுக்கான உபகரணங்களை வழங்கியமை, அடிப்படை வசதியற்ற முதியோருக்கான வசதிவாய்ப்புக்கள், வீட்டுத்திட்ட உதவிகள், மருத்துவ வசதிகள் மற்றும் முதியோர் சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கியமை போன்றவற்றிற்கு நன்றி தெரிவித்தார்.மேலும், ரூபா இரண்டாயிரம் முதியோருக்கான கொடுப்பனவில் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கும் அவற்றை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை சாதகமாக பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

28eldersec2