19smallenter2யாழ்ப்பாண மாவட்ட சிறுகைத்தொழில் முயற்சியாளரை ஊக்குவிக்கும் செயலமர்வு 19.11.2021  காலை 8.30 மணியளவில் யாழ்.பொதுநூலகத்தில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது " சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் உங்கள் பிரச்சனைகள், தேவைகளை வெளிப்படுத்துவதன் மூலம் CASME TASK FORCE ஊடாக உங்களுக்கான தீர்வுகள் வழங்கப்படும் அத்தோடு எதிர்காலத்தில் நீங்கள் சிறந்த தொழில் முயற்சியாளராக பரிணமிப்பதுடன், எங்களுடைய மாவட்டமும் அபிவிருத்தியடையும் இதனூடாக இளைஞர்களுக்கான தொழிவாய்ப்பும் அதிகரிக்கும்" எனக் குறிப்பிட்டார்.

மேலும் CASME செயலணி மற்றும் SDB வங்கியின் தலைவர் திரு.லக்ஸ்மன் அபயசேகர கருத்துத்தெரிவிக்கும் போது "சிறிய நடுத்தர உரிமையாளர்களின் நோக்கம், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நிதிசார் முகாமைத்துவங்கள் தொடர்பாகவும் மேலும் விதாதா வளநிலையம் மற்றும் ஏனைய நிறுவனங்களோடு இணைந்து உங்களுக்கு சேவையாற்றுவோம்" எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தேசிய வணிகர் கழகத்தின் தலைவர்,இலங்கை தொலைத்தொடர்பு மொபிட்டலின் பிரதிப்பணிப்பாளர், சனச அபிவிருத்தி வங்கியின் பிராந்திய முகாமையாளர், மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஆகியோரும் தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

 

   19smallenter1 19smallenter2 19smallenter3 19smallenter4