25madalre2

 

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை தொகுத்து வெளிவரும் "யாழ்.மாவட்டச் செயலக மடல்-2020" மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (25.11.2021) அன்று மாவட்டச் செயலகத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

 

இவ் யாழ்.மாவட்டச் செயலக மடலானது மலர்குழுவின் சார்பில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிற்கு வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ் வெளியீட்டு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி)திரு.எஸ்முரளிதரன் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்டச்செயலக கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் இதழாசிரியர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

 

இச் செயலக மடலானது மாவட்டச் செயலத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை தொகுத்து ஆவணப்படுத்துவதற்காகவும், சமூகத்தில் மனித வாழ்வோடு தொடர்புடைய பிரச்சினைகள் அதற்கு அரச சேவையில் வழங்கப்படும் தீர்வுகள் ஆகிய பணிகளை மக்களுக்கு எடுத்துக் காட்டும் வகையிலும் வெளியிடப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

25madalre1