யாழ். மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்களுடன் 29.11.2021 அன்று மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.சு.முரளிதரன் மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் பாணின் உற்பத்தி மற்றும் விலை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததன் காரணமாக 450 g பாணின் விலை 10 ரூபாவினால் அதிகரித்து 85 ரூபா எனவும், ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது.





