புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பு காரியாலயத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களினால் 2021.11.30 அன்று காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பு காரியாலயத்தில் வைத்து புனர்வாழ்வு பெற்ற இருவரிற்கு கணினிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது" புனர்வாழ்வுபெற்று வந்த உங்களுக்கு சமூகத்தில் பல்வேறு அழுத்தங்கள் காணப்பட்டாலும், உங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இக் கணினி மூலம் உங்களுடைய தொழிலை மேலும் வினைத்திறனாக மேற்கொண்டு, வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.

மேலும், இந் நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி, கேணல்.ஏக்க நாயக்க (கட்டளை அதிகாரி, 20ஆவது படைப்பிரிவு,தேசிய மாணவர் படையணி), மாவட்ட பொறுப்பாளர் கேணல். எஸ். தயானந்த (புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பு காரியாலயம்), உதவிப் பணிப்பாளர் எஸ்.நிஷாந் (பல் நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம்), மற்றும் குறித்த திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்