யாழ்.மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவில் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில் யுத்தம் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் முகமாக தொழில்நுட்ப மற்றும் அறிவு பரிமாற்ற நிகழ்ச்சித்திட்ட ஆரம்ப நிகழ்வு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (2021.12.03) தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

தொழில் நுட்ப மற்றும் அறிவு பரிமாற்ற ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி.த.நஜீமா அகமட் அவர்களும் கலந்து கொண்டதோடு, வளவாளர்களாக திரு.தாசீன் (உதவிப்பணிப்பாளர், இளைஞர் விவகார விளையாட்டுத் துறை), திரு.ந.நந்தரூபன்( தலைவர், யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் மன்றம்), கலாநிதி திரு.பிரபாகர் ( கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம்), பொறியிலாளர்களான திரு.சிவசுதன் மற்றும் திரு.தனோயன் (NERDC), திருமதி.கோமதி (மாவட்ட உத்தியோகத்தர், விதாதா வள நிலையம்),திரு.க.பரணிதரன் (விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர், விதாதா வள நிலையம்), மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், இரண்டு நாட்கள் (2021.12.03-2021.12.04) நடைபெற்ற நிகழ்வில் வாழ்வாதார சுயதொழில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செயலமர்வும் செயன்முறை விளக்கமும் வழங்கப்பட்டதோடு மீன் பதனிடுதல் தேங்காய் எண்ணெய் உற்பத்தி, திரவ சவர்க்கார உற்பத்தி, மெழுகுதிரி உற்பத்தி மற்றும் பன்னீர் உற்பத்தி ஆகியன நேரடியாக செய்து காட்டப்பட்டதுடன் பயனாளிகளிடமிருந்து பின்னூட்டல்களும் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.