7dcdcm4யாழ்ப்பாண மாவட்ட சிறுவர், பெண்கள் தொடர்பான அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.12.2021) மதியம் 11.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது "கொவிட் - 19 காலத்தில் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்து காணப்படுவதாக குறிப்பிட்டார். இந்த விடயத்தில் பிரதேச செயலகர்கள், கிராம சேவகர் ஊடாக கல்வித் திணைக்களத்தோடு இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இது தொடர்பான உதவிகள் , ஒத்துழைப்புக்களை பிரதேச செயலகங்கள் மற்றும் அரசதிணைக்களங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை பெற்று மாணவர்களின் வருகையை அதிகரிக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

 

மேலும், இக் கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் 2020,2021 இல் நிகழ்ந்த சிறுவர்கள், பெண்களிற்கு எதிரான பெருங்குற்றம் மற்றும் சிறுகுற்றங்கள் தொடர்பாக பொலிஸ்தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு பிரதேச மட்டத்தில் செயற்படுகின்ற உத்தியோகத்தர்களோடு இணைந்துதான் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இல்லாமல் செய்யமுடியுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

 

மேலும்,மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இக்கலந்துரையிடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள்,கல்வித் திணைக்கள அதிகாரிகள், சுகாதார திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக சிறுவர் தொடர்பான அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக சிறுவர் பெண்கள் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

7dcdcm1 7dcdcm3 7dcdcm2 7dcdcm7

 

7dcdcm4 7dcdcm5 7dcdcm6 7dcdcm8