மதுசாரம் மற்றும் போதைபொருள் நிலையத்தின் ஏற்பாட்டில் உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என். கமலராஜன் அவர்களின் தலைமையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு இன்றைய தினம் (07.12.2021) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.இப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு உதவி மாவட்டச் செயலாளர் கருத்துரைக்கும் போது " பிரதேச செயலகத்திற்கு வரும் மக்களுக்கு புகைப்பிடித்தல், மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வினை வழங்குதலிற்கான அடிப்படை அறிவு இப் பயிற்சிப்பட்டறை ஊடாக உங்களுக்கு வழங்கப்படவுள்ளது. உங்களால் சமூகத்தில் பலதரப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அனைத்து நிகழ்வுகளிலும் இது சார்ந்து விழிப்புணர்வுகளை வழங்குதல் வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும், இச் செயலமர்வில் மாவட்ட இணைப்பாளர் திருமதி.அ.சியாமினி(தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை), வடக்கு மாகாண இணைப்பாளர் திரு.ஏ.கோடீஸ்வரன் மற்றும் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.







