9financem2நிதியாண்டு 2021 இற்குரிய நான்காம் காலாண்டு இற்றை வரையான நிதி செயற்பாட்டு முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (2021.12.09) வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலக கணக்குக் கிளையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்த திணைக்களங்களினது நிதி செலவீன தலைப்புக்களின் கீழ் கிடைக்கப்பெற்ற ஒதுக்கீடுகள் அவற்றின் நிதி செயற்பாட்டு தற்போதைய நிலைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் , வருட இறுதி நெருங்கிக் கொண்டிருப்பதனால் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்தி, வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்த கேட்டுக்கொண்டார்.மேலும், அடுத்த வருடத்திற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிட்டதக்கது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி),பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், மாவட்டச்செயலக கணக்காளர்கள் , மாவட்ட செயலகம் ,பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
 
9financem1