15losspay1இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையிலும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களின் இணைப்புச் செயலாளர் திரு.சதாசிவம் இராமநாதன் அவர்களின் பங்குபற்றுதலுடனும் 2021.12.15 அன்று காலை 9 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கொடுப்பனவு வழங்கலில் கலந்து கொண்டு மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது " இழப்பீட்டுக்கான செயலகம் மூலம் புதிய அரசாங்க இழப்பீடுகளை வழங்கி வருகிறது. இன்றைய தினம் பொதுமக்கள் சொத்திழப்பு, இறந்த மற்றும் காயமடைந்த கொடுப்பனவு மற்றும் சேதமடைந்த ஆலயங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளது. பத்து பிரதேச செயலகங்களை சேர்ந்தவர்களை சேர்ந்த 54 பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை வழிபாட்டு இடங்களுக்கும் பொது மக்களுக்கும் இழப்பீடுகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இழப்பீட்டுகான செயலகம் இழப்பீடு மட்டுமல்லாது வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் சமூக மட்ட செயற்பாடுகளுக்கும் உதவுகிறது. இதற்கு பொறுப்பாக இருந்த இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் கருத்துத் தெரிவிக்கும் போது கடந்த காலத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தினால் தற்போதைய அசாதாரண சூழலிலும் பலதரப்பட்ட உதவிகளை செய்யப்படுகிறது. மேலும் இந் நிகழ்வை ஒழுங்கமைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மருதங்கேணி உதவி பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
15losspay4 15losspay3 15losspay2