யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் ILO நிறுவனத்தின் நிதி உதவியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்சந்தை நேற்றைய தினம் (2021.12.18) காலை 9 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட அரசாங்க அதிபர் உரையாற்றும் போது மாற்றுத் திறனாளிகள் தமக்கான பொருத்தமான தொழில் வாய்ப்பினை தெரிவு செய்து சமூகத்தில் முன்மாதிரியாக திகழ வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்புக்களை வழங்கும் தொழில் நிறுவனங்களிற்கு நன்றிகளை தெரிவித்ததோடு, சமூக அபிவிருத்தியில் மாற்றுத் திறனாளிகளின் வகிபங்கு அதிகமாகவுள்ளது. எனவே நீங்கள் ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும்" எனவும் தெரிவித்தார்.
மேலும், இத் தொழில் சந்தையில் 150க்கும் அதிகமான தொழில் தேடும் மாற்றுத்திறனாளிகளும் 30க்கு மேற்பட்ட தொழில் வழங்கும் நிறுவன பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் ,மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.







