21disascentre3தீவகம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்த கால அவசர செயற்பாட்டு மையம் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உருப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதனால் நேற்றைய தினம் (2021.12.21) மதியம் 12.30 மணிக்கு தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டதோடு, பிரதேசசெயலர் திருமதி.மஞ்சுளாதேவி சதீசன், மாவட்ட திட்டமில் பணிப்பாளர் திருமதி.எஸ்.நிக்கொலஸ்பிள்ளை, மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பணிப்பாளர் சூரியராஜா மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
 
21disascentre2 21disascentre1