20parlibudget3பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட முன்மொழிவு - 2022 தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (20.12.2021) மதியம் 1 மணிக்கு தீவகம் வடக்கு, ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆராயப்பட்டதோடு, அத் திட்டங்களை கால அவகாசத்தின் அடிப்படையில் காலாண்டு மற்றும் அரையாண்டு திட்டங்களென வகைப்படுத்தி அதற்கேற்ப முற்கூட்டியே நிதிகளை விடுவித்தல் மற்றும் செயற்திட்டங்களின் பௌதீக ரீதியான முன்னேற்றங்களை பார்த்து நிதிகளை விடுவித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் தையல் தொழிலில் சிறந்த நிலையில் விளங்கும் முயற்சியாளர் ஒருவரின் அனுபவப்பகிர்வு ஏனைய முயற்சியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் , ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
 
20parlibudget1 20parlibudget2 20parlibudget4