கிராமிய மக்களின் வாழ்வாதாரங்களுக்கு புத்துயிரளித்து கிராமிய உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் ஊடாக தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 2022ஆம்ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் அபிவிருத்தியின் பலன்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் செயல்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் 22.12.2021 அன்று பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ,மேலதிக அரசாங்க அதிபர்( காணி) ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்வில் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஆலோசனை வழங்கிய பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வாழ்வாதார திட்டங்களை அதிகரித்து அதற்கான சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுத்தல் அவசியம் எனவும் நீண்டகால பொருளாதார அபிவிருத்திக்காக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி செயற்பாடுகளை முன்னெடுக்கவும் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் ஒவ்வொரு நிதி ஒதுக்கீடு மட்டத்தின் கீழும் கருத்திட்டங்களை தெரிவு செய்வதில் கிராம சேவகர் பிரிவு மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு மட்ட அபிவிருத்திக் கருத்திட்ட முன்மொழிவுகளை மேற்கொள்ளும் போது வாழ்வாதார அபிவிருத்திக்கு 40 சதவீதமும், பொது உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 40 சதவீதமும் சுற்றாடல் மற்றும் நிலையான அபிவிருத்திக்கு 10 சதவீதமும் சமூக நலன் மற்றும் சமூக அபிவிருத்திக்கு 10 சதவீதமும் என்ற ரீதியில் முன்மொழிவுகள் வரிசைப் படுத்தப் பட வேண்டும் எனவும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 40 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டியதுடன் மேலும் அதிகபட்ச எல்லையை பொருட்படுத்தாமல் தேசிய மற்றும் பிரதேச தேவைகள் மற்றும் உற்பத்தி திறன் அடிப்படையில் வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான ஒதுக்கீட்டை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டது. இச் செயற்திட்டம் பெருந்தோட்டம்,மீன்பிடி,விவசாயம் ,கைத்தொழில் ஆகிய 4 பிரிவுகளை உள்ளடக்கியதாகவும்,
மேலும் குறித்த திட்டங்கள் மூலம் மக்கள் குறுகிய காலத்தில் பயன்பெறும் வகையிலும் வேலைவாய்ப்புக்களை பெறும் வகையிலும் அமுல்படுத்தக் கூடிய பொருத்தமான திட்டங்களை பொருத்தமான காலத்தில் திட்டமிடலுடன் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.






