யாழ்ப்பாண மாவட்டச் செயலக சமுர்த்தி கிளையின் ஏற்பாட்டில் High Tech Lanka International vacational and Technical Training Institute( PVT) Ltd நிறுவனத்தினால் பத்தொன்பது பயனாளி மாணவர்களுக்கு கனரக வாகனப்பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சி முடிவில் குறித்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (22.12.2021) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர்(காணி) ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் ,மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதேச செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.






