24disastermedia1யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல் அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் திரு.என்.சூரியராஜா தலைமையில் 24.12.2021 ன்று காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் அனர்த்த நடவடிக்கைகளின் போது மேற்கொள்ள வேண்டிய அனர்த்த குறைப்பு நடவடிக்கை மற்றும் முன்னேற்பாடுகள் அவற்றுக்கான பயிற்சி மற்றும் விழிப்புர்வுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் வெள்ளப்பெருக்கு , வறட்சி ,இடி மின்னல், சூறாவளி, சுனாமி போன்ற அனர்த்தங்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்து விளக்கப்பட்டது.இக்கலந்துரையாடலில் யாழ்பாண பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார். அத்துடன் இந் நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
24disastermedia2  24disastermedia3