27dcdc15தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் சிறுவர் வியாபாரம் மற்றும் சிறுவர் ஆட்கடத்தலை அடையாளம் காணல் மற்றும் அறிக்கையிடல் தொடர்பான பயிற்சிநெறி யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (2021.12.27) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
இப் பயிற்சிநெறியில் மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது "சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், போதைப்பொருள் பாவனை, போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் சிறுவர்களை ஈடுபடுத்தப்படுதால் இலகுவில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் எண்ணத்துடன், அதிகளவில் சிறுவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுத்தப்படுவதுடன், சிறுவர்கள் தமது நெருங்கிய உறவினர்களாலேயே அதிகளவில் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதாக அண்மைய தரவுகளை கோடிட்டு தெரிவித்தார். இதனை தடுப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள். ஆசிரியர்கள் என அனைவரும் கூட்டாக இணைந்து செயற்படுதல் அவசியமானதென எனத் தெரிவித்தார்.
இப்பயிற்சி நெறியின் வளவாளராக கலந்து கொண்ட சட்ட வைத்திய நிபுணர் வைத்தியர் எஸ். பிரணவன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது "பயிற்சி நெறியில் குழந்தைகளை வைத்து பிச்சையெடுத்தல், பாடசாலைகளில் மாணவர்களை அடித்தல்/தண்டித்தல், பாலியல் துஸ்பிரயோகம் , உளவியல் தொடர்பான ஆலோசனைகள், மற்றும் கருத்தரிப்பு தடுப்பு முறைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
 
மேலும், இப்பயிற்சி நெறியின் வளவாளராக கலந்துகொண்டு கிளிநொச்சி சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் (UNICEF) மற்றும் சட்டத்தரணி ஷர்மிலி அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது "மனித வியாபாரம் மற்றும் சிறுவர் வியாபாரம் தொடர்பான சட்ட நடவடிக்கை மற்றும் அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினார். அத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மனித வியாபாரத்திற்கு ஆட்படுவதை தடுத்தல் மற்றும் ஒழித்தல், தண்டனை வழங்குதல் பற்றிய நடைமுறை நெறிமுறைகள் தொடர்பாகவும் குறிப்பிட்டார்.
 
இக் பயிற்சி நெறியில் உதவி மாவட்டச் செயலாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் , சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
27dcdc2 27dcdc3 27dcdc4 27dcdc5
 
27dcdc6 27dcdc7 27dcdc8 27dcdc9
 
27dcdc10 27dcdc11 27dcdc12 27dcdc13
 
27dcdc14 27dcdc15